மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை.
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட ரீதியில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் ,இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளோருக்காக இந்த பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.