‘அடக்குமுறை’ எனும் ஆயுதத்தைக் கையிலேந்தி சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிக்க அரசு முயற்சி.
“எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ள இந்த அரசு, தற்போது அடக்குமுறை எனும் ஆயுதத்தைக் கையிலேந்தி சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிக்க முற்படுகின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பலவந்தமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த அரசு ‘பெயில்’ என ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டினோம். தற்போது எல்லா வழிகளிலும் ‘பெயில்’ என்பது உறுதியாகியுள்ளது. அதனால்தான் அடக்குமுறை வழி கையாளப்படுகின்றது. அதுமட்டுமல்ல சட்டத்தையும் கையில் எடுத்துச் செயற்படுகின்றது. இதன் ஓர் அங்கமாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பலவந்தமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” – என்றார்.