டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் மைல்கல்லை தொட்ட முதல் வீரர்.

யுனிவர்ஸ் பாஸ் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கிறிஸ் கெய்ல் நேற்று டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
செயிண்ட் லூசியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 4 பவுண்டரி 7 சிக்சர்கள் என 38 பந்துகளில் 67 ரன்கள் விளாசி மே.இ.தீவுகளை தொடர் வெற்றிக்கு இட்டுச் சென்றார் கிறிஸ் கெய்ல் .
41 வயதிலும் அவர் மட்டை ஓயவில்லை, மெதுவாகவும் சுழல்வதில்லை. படுவேகம். இந்த மைல்கல்லையும் சிக்ஸ் மூலம்தான் எட்டினார் கெய்ல், வைட் லாங் ஆனில் பறக்க விட்ட சிக்சர் மூலம் 14,000 ரன்களை எட்டினார்.
431-வது மேட்ச், 423வது இன்னிங்சில் 14,000 ரன்களை எட்டினார் கிறிஸ் கெய்ல்.
சேசிங்கின் போது 2வது ஓவரில் ஜோஷ் ஹேசில்வுட்டை ஒரு சிக்சர் 3 பவுண்டரிகள் பறக்க விட்டார் யுனிவர்ஸ் பாஸ் கெய்ல். 11வது ஓவரில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பாவை 3 நேர் சிக்சர்கள் அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார் கெய்ல். அரைசதம் அடித்து சிக்ஸ் மெஷின் மட்டையை உயர்த்தினார். மட்டையில் தி பாஸ் ஸ்டிக்கரும் இருந்தது.
இவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் போலார்டு 10,836 ரன்களுடனும் 3ம் இடத்தில் ஷோயப் மாலி 10,741 ரன்களுடனும், 4ம் இடத்தில் டேவிட் வார்னர் 10017 ரன்களுடனும் 5ம் இடத்தில் விராட் கோலி 9,922 ரன்களுடனும் இருக்கின்றனர், பிஞ்ச் (9,728), ஏபி டிவில்லியர்ஸ் (9,318) என்று அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனர்.