தென்னம் உற்பத்திசார் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்.
சூழலுக்கு நட்புறவான முறையில் தென்னம் உற்பத்திசார் பயன்பாட்டுப் பொருட்களை மனைப் பொருளாதார விருத்தி பங்களிப்பது ஊடாக நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்ளைப் பிரகடனத்திற்கமைய இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தென்னம் உற்பத்திசார் உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சமுர்த்தி திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்துடன் இணைந்து வகையில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினர் மனைப் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றவாறு தென்னம் உற்பத்திசார் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில் முயற்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்,தேவையான பயிற்சி நடவடிக்கைகள், ஆரம்ப மூலதன தேவைப்பாடுகள், தொழில்நுட்ப வசதிகள், இதற்காக வழங்கப்படும் மானிய வசதிகள் ,இதர சலுகை கடன் வசதிகள்,உற்பத்தி பொருள் தரச்சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் சிரட்டை கரியின் நாளாந்த பயன்பாடுகள், அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் எஞ்சிய சிரட்டை உள்ளிட்ட தென்னம் பொருட்களை ஒன்றுதிரட்டி பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும்
குறித்த முயற்சியில் ஆர்வம் உள்ள முயற்சியாளர்கள் மாவட்ட சமுர்த்தி திணைக்களத்திற்கு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் இணைப்புச் செயலாளர், தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் ,துறைசார் திணைக்கள தலைவர்கள்,ஹேலீஸ் ஏற்றுமதி சந்தைப்படுத்தும் அதிகாரிகள்
மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.