ஜூலை 16ஆம் தேதி கூடுகிறது திமுக எம்பிக்கள் கூட்டம்

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள், மேக்கேதாட்டு அணை விவகாரம், நீட் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.