யாழில் மேலும் இருவர் கொரோனவால் சாவு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இன்றிரவு 8 மணியளவில் சுழிபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.