ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த 16 வயது மலையக சிறுமி தீக்காயங்களுடன் மரணம்?
எம்.பி. ரிஷாத் பதுர்தீனின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 16 வயது சிறுமி ஜூலை 3 ஆம் தேதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) மரணமடைந்தார்.
சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தபோது, கொசு சுருளை எரிக்க முயன்றபோது தொடங்கிய தீ விபத்தில் சிறுமி காயமடைந்ததாக வீட்டிலிருந்தோர் தெரிவித்திருந்தனர். இருப்பினும், சிறுமியின் உடலில் சுமார் 70% எரி காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியை எம்.பி. பதுர்தீனின் வீட்டு வேலைக்கு அனுப்பிய நபர் சிறுமியின் வயதை மறைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
பொரளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இறந்த சிறுமியின் சடலம் சொந்த ஊரான மலையகத்தின் டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வழி அறியமுடிகிறது.