அமெரிக்க நன்கொடையாக 1.5 மில்லியன் டோஸ் மாடர்னா தடுப்பூசி
கோவாக்ஸ் வசதி மூலம் இலங்கைக்கு அமெரிக்க நன்கொடையாக வழங்கப்படும் 1.5 மில்லியன் டோஸ் மாடர்னா தடுப்பூசியை ஏற்றிச் வந்த சிறப்பு விமானம் இன்று காலை இலங்கைக்கு வந்துள்ளது. பின்னர் அவை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
விமானத்தில் 1,500,100 டோஸ் மாடர்னா தடுப்பூசி இருப்பதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவாக்ஸ் வசதியின் கீழ் இலங்கை பெற்ற தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதி இதுவாகும். முன்னதாக, இந்த வசதியின் கீழ் இலங்கைக்கு 264,000 டோஸ் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி கிடைத்தன.