புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடொன்று கையளிப்பு நிகழ்வு.
கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளினால் கண்டி மாவட்டத்தில் உடத்தலவின்னைப் பிரதேசத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடொன்று கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் சிஹானா ரஹீம் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளின் பங்களிப்புடன் கல்வியிலே திறன்மிக்க மாணவிகள் தங்களது கற்றல் செயற்பாட்டை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கு வீட்டுச் சூழலை வளமாக்கும் நோக்குடன் முன்னெடுக்கும் செயற் திட்டத்தின் கீழ் ரூபா 06 இலட்சம் செலவில் உடத்தலவின்னைப் பிரதேசத்தில் திறன்மிக்க மாணவி ஒருவருரின் வீட்டின் மேல் மாடியினை சகல வசதிகளும் கொண்டதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் சிஹானா ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.
கல்வியில் திறன்மிக்க மாணவிகளாக இருந்த போதிலும் கற்றலுக்கான சூழல் வளமுள்ளதாக அமைவதில்லை. சீரான கற்றுக்கு உகந்த வீடுகள்அமைவதில்லை. வீடு என்று இருந்த போதிலும் அதற்கான அறை வசதிகள் இருக்காது. மழைகள் பெய்தால் வீடு முழுக்க நனைந்து வெள்ளம் வார்ந்தோடும். காற்றுகள் அடித்தால் கூரையின் தகரம் பறக்கும். ஒழுங்கான மலசல கூட வசதியில்லை.
கொரோனா இடர் காலத்தில் இணைய வழி கற்றலை மேற்கொள்ள கணனி வசதிகள் இல்லை. இவை போன்ற பல்வேறு சவால்களுடன் சில மாணவிகள் கற்றலை மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட மாணவிகள் தங்களது கற்றல் செயற்பாட்டை தடையின்றி மேற்கொள்வதற்கு கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளின் பங்களிப்புடன் ஒரு மாணவியின் வீட்டின் மேல் மாடியினை சகல வசதிகளும் கொண்டதாக மாற்றியமைத்து அம்மாணவிகளது கல்வி மேம்பாட்டுக்காக காருண்ணிய உதவி புரிந்துமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)