இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் வலுக்கட்டாய இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரிதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி இந்தத் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.