வௌிநாடுகளில் இருந்து தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக் கொண்டு இலங்கை வருபவர்களுக்கான சலுகை
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக் கொண்ட பயணிகளுக்கு இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அவர்களுக்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலாவது பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவில்லை எனின் அவர்களுக்கு 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்னும் 7 நாட்களுக்குப் பிறகு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் .
இந்தியா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ளது மற்றும் வியட்நாம் மீதான தடை நீக்கப்பட்டது.
எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளுக்கான திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் கொண்ட , சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாட்டுக்குள் நுழைய முடியும் என்றும், அப்படி வருவோர் அரசாங்கத்தால் நடத்தப்படும் மையத்தில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ் அறிக்கை மேலும் கூறுகிறது.