ஒரே மாதத்தில் 20 லட்சம் இந்தியர்கள் கணக்குகள் முடக்கம்- வாட்ஸ் அப் அதிரடி!
மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் பயனாளர்களின் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமாக பயனார்களை கொண்டுள்ள பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், பெறப்பட்ட புகார்களின் விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
இதனால், வாட்ஸ் அப் நிறுவனம் தனது முதல் இணக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், மே 15 முதல் ஜூன் 15 வரையிலான ஒரு மாத காலத்தில் 345 புகார்களை பெற்றதாகவும், 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை தடை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மே 15 முதல் ஜூன் 15 வரையிலான ஒரு மாத காலத்தில் 345 புகார்களை பெற்றதாகவும், 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை தடை செய்ததாகவும் தெரிவித்துள்ளது. அங்கீகாரமில்லாமல் அதிக அளவில் செய்திகளை அனுப்பியதாலேயே 95 சதவீதத்துக்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒரு மாத காலத்தில் 345 புகார்கள் தங்களுக்கு வந்ததாகவும் அதன் கீழ் 63 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ் அப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்துக்கு 36 புகார்கள் வந்துள்ளன. சராசரியாக மாதமொன்றுக்கு உலகம் முழுவதிலும் 80 லட்சம் கணக்குகள் தடை முடக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.