விவசாயிகளுக்கான களஞ்சிய வசதி செயற்திட்டம் ஆரம்பம்.
மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 காலத்தில் விவசாய அறுவடைகளை பாதுகாப்பதற்காக, உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை அமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பநிகழ்வுகள் அச்சுவேலி மற்றும், குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்கள் மற்றும் துறைசார் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டு, வெங்காய களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை அச்சுவேலி பிரதேசத்திலும் உருளைக்கிழங்கு களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள்,
“விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. விவசாய இராஜாங்க அமைச்சராக இருந்தகாலத்தில் இந்தக் களஞ்சியங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனடிப்படையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிநடத்தலில், உலக வங்கியின் நிதியுதவியோடு இந்த விவசாய களஞ்சியங்கள் தற்போது அமைக்கப்படுகின்றன. அத்துடன் இந்த நாடளாவிய செயற்பாடுகள் யாழ் மண்ணிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படும் சேதனப்பசளை விவசாயத் திட்டமானது நாட்டினதும், மண்ணினதும், மக்களினதும் ஆரோக்கியமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இதனூடாக எதிர்கால சந்ததிக்கு சுத்தமான ஆரோக்கியமான உணவை எம்மால் பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்யமுடியும். அத்துடன் இந்த சேதனப்பசளைகளை விவசாயிகள் மட்டத்தில் உற்பத்தி செய்வதற்கு தேவையான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதோடு, ஒரு ஹெக்டேயருக்கு 12,500 ரூபா வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் கொடுப்பனவை ஊக்கத்தொகையாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தத்திட்டத்தில் ஏற்படும் ஆரம்பக்கட்ட இழப்புகளுக்கான பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விவசாய களஞ்சியங்கள் யாழ் மண்ணில் உருவாக்கப்படுவதானது விவசாயத்துறைசார்ந்த என் கனவு யாழ் திட்டத்தின் ஒரு வெற்றியாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை செயற்திட்டம் ஆரம்பம்.