இலங்கை தமிழர்கள் பகுதியில் தொடர்ந்து திருடு போன உள்ளாடைகள்! பின்னர் தெரியவந்த பகீர் உண்மையால் மன உளைச்சலில் பெண்கள்
தமிழகத்தில் கொடியில் காயப்போடும் பெண்களின் உள்ளாடைகளை குறி வைத்து திருடி குரூர செயலில் ஈடுபடும் சிறுவர்களால் இல்லத்தரசிகள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இலங்கை தமிழர்கள் முகாமில் 80 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனையை இங்கு வசிக்கும் இலங்கை தமிழர்கள் சந்தித்து வருகின்றனர்.
வீட்டின் கொடியில் காயப்போடும் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் குறிவைத்து திருடு போவது தெரியவந்தது. விசாரணையில் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் இந்த குரூர செயலில் ஈடுபடுவதும் பின் அதனை தெருக்களில் வீசி விட்டு செல்வதும் தெரியவந்தது.
இதனால் அப்பகுதி பெண்கள், மிகுந்த மன உளைச்சல் உடைந்துள்ளனர். உள்ளாடை திருட்டு தொடர்பாக, அந்த 2 இச்சை மிருகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாச்சலம் வாழ் இலங்கை தமிழர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளாடை திருட்டில் ஈடுபட்ட அந்த சிறுவர்களின் உறவினர்கள், நியாயம் கேட்க சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் திரண்டு புகார் அளித்துள்ளனர்
பள்ளி செல்லும் வயதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் அவர்களின் குரூர செயல்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களின் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.