ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை அதிகரிக்க அரசாங்கத்திடம் எடுத்துக் கூற வேண்டும் : தயாசிரி
மக்கள் தங்களுடைய தேவைகளை முன் வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கூட நாங்களும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களுடைய தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அரசாங்கத்திடம் எடுத்துக் கூறி அவர்களுடைய தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் பத்திக் , கைத்தறி உள்ளுர் ஆடை உற்பத்தி துறை இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்
குருநாகல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் , தொகுதி அமைப்பாளர்களுக்கிடையிலான கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் பத்திக் , கைத்தறி உள்ளுர் ஆடை உற்பத்தி துறை இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தலைமையில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் எம் எஸ்.எம். பாஹிம் இல்லத்தில் இடம்பெற்றது
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று உள் நாட்டில் விவசாய உணவு உற்த்தி அதிகரிக்க விவசாயிகள் பசளை தொடர்பாகவும், ஆசிரியர்கள் தங்களுடைய சம்பளம் உயர்வ தொடர்பாகவும், இன்னும் பல தேவைகள் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் நாங்கள் அரசாங்கத்தினுடைய பங்காளிக் கட்சியாக இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை அதிகரிக்க வேண்டுமாயின் மக்களின் தேவையறிந்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறி அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார. குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எம். எஸ்.எம். பாஹிம், முஆத், பாயிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)