ஒருவருக்கு ஒரு கிரகம் யோகம் செய்யுமா?
ஒருவருக்கு ஒரு கிரகம் யோகம் செய்யுமா என்பதை நட்சத்திர சாரத்தை வைத்த உறுதிப்படுத்துவோம்!
ஒவ்வொரூ கிரகங்களும்,தனக்குறிய இடத்தில் இருக்கும் போது ஏதாவது ஒரு நட்சத்திர சாரத்தை வாங்கி இருக்கும்.
உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தால் அதிகம் கிரகங்கள் இருக்கும் நடசத்திர சாரம் பற்றி தனி பக்கமே இருக்கும்.
உதாரணமாக மேச லக்கினத்திற்கு குரு பகவான் திசை வருகிறது.இந்த குரு மேச லக்கினத்திற்கு முழு யோகாதிபதி!
இவர் யோகம் செய்வாரா என்பதை எந்த நட்சத்திர சாரத்திலை குரு பகவான் இருக்கிறார் என பார்க்க வேண்டும்.
மேச லக்கினத்திற்கு ஐந்தில் குரு இருக்கிறார் என வைததுக்கொள்வோம் அதாவத சிம்மத்தில் குரு!
சிம்மம் என்பது மகம்,பூரம்,உத்திரம்-1ம் பாதம் கொண்டது!
குரு உத்திரம் ஒன்றாம் பாதத்தில் நின்றால் குரு பகவான் முழு யோகத்தை கொடுப்பார் ஏனென்றால் உத்திரம் சூரிய பகவானின் நட்சத்திரம் அதுமில்லாமல் அந்த சூரியன் மேச லக்கினத்திற்கு யோகர்!
ஆனால் அவர் கேதுவின் நட்சத்திரம் மகம்,சுக்கிரனின் நட்சத்திரம் பூரத்தில் நின்றால் சாதாரண யோகம்தான் ஏற்படும்!
இன்னொரு இரகசியம் சொல்றேன் ஒருவர் கடக லக்கினமாக இருந்து மகரத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அந்த கிரகத்தால் யோகம் உண்டு!
மகரம்தான்,கடகத்திற்கு பகையாச்சேனு நினைக்கக்கூடாது அதாவதூ கடகத்திற்கு யோகரான சூரியன், சந்திரன்,செவ்வாய் மூன்றுக்கும் உடைய நட்சத்திரங்களான உத்திராடம்,திருவோணம், அவிட்டம் சேர்ந்ததுதான் மகரம்.
ஒரு பலனை மோலோட்டமா பார்க்காமல் ஆழ்ந்து யோசித்து பலன் சொல்ல வேண்டும்.அதற்கு ஆழ்ந்த ஞானமும்,நுண்ணறிவும் வேண்டும்.
ஜாதகம் கேட்பவர்களிடம் நாலாமாதி,ஆறாமாதிபதி என சுற்றி வளைக்காமல் நச்சுனு நான்கே வார்த்தைகளில் பலனை தீர்க்கமா சொல்லனும்.
வழவழனு சொன்னால் கேட்பவர்களுக்கு நிறைய நேரம் பலன் சொல்றாரு என கேட்பதற்கு ஆசையா இருக்கும் ஆனால் பலன் பலிக்காது!
ஒருவருக்கு என்ன பலன் தேவையோ அதை நச்சுனு தீர்க்கமா நாலு வார்தை சொன்னாலே போதும்!கண்டிப்பா சொன்னது நடக்கும்.