5ம் ஆண்டு மெடிக்கல் எக்ஸன்ஸ் அவார்ட்ஸில் கொரானா முன் களப்பணி பணியாளர்களுக்கு விருது
உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்திய ஐந்தாம் ஆண்டு மெடிக்கல் எக்சல்லேன்ஸ் அவார்டு-2021 (5TH ANNUAL MEDICAL EXCELLENCE AWARDS -2021) 17-07-2021 அன்று 7 மணி அளவில் சென்னை லீ மெரிடியன் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க போர்க்கால அடிப்படையில் பணியாற்றி கொரானா மூன்றாவது அலையை கட்டுக்குள் கொண்டுவந்த, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட கொரானா ஒழிப்பு போர்க்கால வீரர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரும், உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவருமான திரு.செல்வகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாண்புமிகு தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மாண்புமிகு அமைச்சர் பேசுகிற பொழுது தமிழ்நாடு அரசு கொரானா ஒழிப்பிற்கு முன்னெடுத்து இருக்கும் திட்டங்களைப் பற்றியும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களைப் பற்றியும், மருத்துவர்கள் செய்துவரும் மகத்தான பணியைப் பற்றியும்,இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து இருக்கிற உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஐந்தாண்டு சேவை பற்றியும் பேசியதோடு, கொரானா முன் களப்பணி பணியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, மற்றும் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இதில் தமிழ்நாட்டின் பிரபல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.