இலங்கையில் ‘டெல்டா’ தாண்டவமாடும் ஆபத்து அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை.
“இலங்கையில் ‘டெல்டா’ வைரஸ் தொற்று தீவிரமடையும் ஆபத்து உள்ளது.”
இவ்வாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் பல வகையான மாறுபாடுகள் பரவி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘டெல்டா’ வைரஸ் வகை உலக நாடுகளில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இலங்கையால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
எனினும், தடுப்பூசி பெற்றவர்கள் ‘டெல்டா’ மாறுபாட்டினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ‘அஸ்ட்ரா செனெகா’, ‘பைசர்’ மற்றும் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் டெல்டா வகைகளுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கின்றது.
இதனிடையே தென் அமெரிக்காவில் பெரு மாநிலத்தை மையமாகக் கொண்ட பல நாடுகளில் ‘லாம்ப்டா’ வகை வைரஸ் பரவி வருகின்றது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தை மையமாக கொண்ட பல நாடுகளில் ‘எப்சிலின்’ வைரஸ் பரவி வருகின்றது” – என்றார்.