கடலூரில் சமூக இடைவெளி இல்லாமல் சந்தையில் திரண்ட மக்கள் .. தொற்று பரவும் அபயாம்..
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் வரை பல தளரவுகள் கொடுக்கப்பட்டாலும் வார சந்தைக்கு மட்டும் தடை நீடித்த நிலையில் இந்த வாரத் சந்தை செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் பல மாதங்களுக்கு பிறகு சந்தைகளை இயங்க துவங்கியது அதன்படி கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், கருவாடுகள் போன்றவை விற்பனை செய்யப்படும். கடலூர் சுற்றியுள்ள விவசாயிகள் சந்தையில் நேரடியாக தங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பூக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
சந்தையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை விலை குறைந்து காணபடும் என்பதால் கடலூர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், களிச்சிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் பல தளர்வுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. கடலூர் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் வார சந்தை இன்று இயங்கியது. இன்று ஏராளமான வியாபாரிகள் இந்த பகுதியில் கடைகள் அமைத்து விற்பனை செய்ததால் நேரடியாக குறைந்த விலையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கருவாடு ஆகியவற்றை வாங்குவதற்காக அதிகாலையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சந்தையில் கூடினர்.
/இதனால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது. சமூக இடைவெளி இல்லாமலும் முக கவசம் இல்லாமலும் மக்கள் திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அலை உருவாகும் நிலையில் மக்களிடம் முக்கசவம் அணியாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.