பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கும் – நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இரண்டு பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கக் கூடாது என மூத்த தலைவரான சுக்பால் கெய்ரா, 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதினார். சித்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த சூழலில்பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாக காந்தி நியமித்திருப்பதாக, பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களாக பவன் கோயல், குல்ஜித் சிங நாக்ரா உள்ளிட்ட நான்கு பேர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.