திருமண நிகழ்வில் 150 பேர் கலந்துகொள்ளலாம் : மாகாண எல்லைகளை கடக்க தடை.
திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்துக்காக உரிய ஆவணங்களைச் சமர்பிப்பிதன் மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமண நிகழ்வின் போது மணமக்கள் இரண்டு மாகாணங்களில் இருப்பின் ஒரு தரப்பினருக்கு அடுத்த மாகாணத்துக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மணமக்களின் பெற்றோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன், வேறு எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது எனவும் திருமண நிகழ்வில் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.