கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆதரவு! சம்பந்தன் தெரிவிப்பு.
“வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (19) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.