கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்போம்! – அமைச்சர் ரோஹித திட்டவட்டம்.
“எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம்.”
இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்து அச்சப்படாத காரணத்தினால்தான், இன்று விவாதத்துக்கு இதனை எடுத்துள்ளோம்.
இன்று இதனைக் கொண்டுவந்துள்ள எதிர்த்தரப்பினர் தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றுதான் செயற்படுகிறார்கள்.
எரிபொருள் வாங்க, மக்களை நீண்ட வரிசையில் கடந்த காலத்தில் நிற்க வைத்த இந்தத் தரப்பினர் தான் இன்று எரிபொருள் விலையெற்றம் குறித்து பேசுகிறார்கள்.
இந்தநிலையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இவர்களால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் வெற்றிகரமாகத் தோற்கடிப்போம்” – என்றார்.