ஈதுல் அல்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
கொரோனாவின் மூன்றாவது அலை மக்களை உலுக்கி மிரட்டிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களும் என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி தெரிவித்தார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துக் தெரிவிக்கையில்
இப்றாஹீம் நபி (அலை ) அவர்களும் அவர்களது குடும்பத்தினர்களது தியாகத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் பெருநாளில் நாட்டு மக்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம் சுவிட்சம், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் தழைத்தோங்க செய்யும் திருநாளாக இப்பெருநாள் அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பேணி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளிகளைப் பேணி அடுத்தவர்களுக்கு தம்மால் கொரோனா தொற்றுத் தீங்கும் வாராமல் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்நோயில் இருந்து தப்பிக்க முடியும்.எனவே நோய் வந்த பின் நொந்து போவதை விட வருமுன் காப்பதே மேல் என்பது நினைவில் நிறுத்தி முஸ்லிம்களாகிய நாங்கள் அனைவரும் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த தியாகப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த ஈதுல் அல் ஹா பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
(இக்பால் அலி)