ஒரே நேரத்தில் 24 கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகின்ற வல்லமை கொண்ட இந்திய கிரிக்கெட் சபை.
இந்திய கிரிக்கெட் அணி அபாரமாக மிகப்பெரிய கிரிக்கெட் பலம் பொருந்திய ஒரு நாடாக வலம் வந்து கொண்டிருக்கின்றமை எல்லோரும் அறிந்த விஷயம்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் இரண்டு அல்லது மூன்று அணிகளை உருவாக்கதக்க வகையில் அவர்களிடம் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் அண்மைக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இன்று 11 வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினர், இதேபோன்று ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாாந்தில் இன்றைய கவுன்டி லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியது.
மொத்தமாக இந்த இரண்டு அணிகளிலும் சேர்த்து 22 வீரர்கள் போட்டிகளில் பங்கெடுத்தது மாத்திரமல்லாமல், County XI அணியில் இன்னும் இரண்டு இந்திய வீரர் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
இதுதொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜஃபர் தெரிவித்த ஒரு கருத்தின்படி, ஒரே நேரத்தில் மொத்தமாக 24 கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகின்ற வல்லமையை இந்திய கிரிக்கெட் சபை உருவாக்கியிருக்கிறது என்றும் இதுவே இந்திய கிரிக்கெட்டின் பலம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த 23 வீர்ர்களையும் விடுத்து விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, இஷாந்த் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் எந்தவொரு போட்டியிலும் ஆடாமல் வெளியில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் மிகப் பெரிய படை பலம் பொருந்திய அணியாக உலக கிரிக்கெட்டை இந்தியா ஆண்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம் எனலாம்.