நவீன தொழில்நுட்பத்துறையின் முன்னோடியாக சீனா.

சீனாவின் நவீன தொழில்நுட்பத்துறையின் முன்னோடியாக சீனாவின் CRRC ரயில் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மாக்லேவ் #maglev அதிவேக ரயில் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெள்ளோட்டமாக பயணித்தது.
வித்தியாசமான தோற்றத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ரயில் உலகின் முதல் அதிவேக மணிக்கு 600 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய மாக்லேவ் ரயில் போக்குவரத்து முறை கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் கரையோர நகரமான கிங்டாவோவில் உத்தியோகபூர்வமாக அறிமுகமாகியுள்ளது.
இது சீனாவால் முழுமைாக உருவாக்கப்பட்டதுடன் ரயில் போக்குவரத்து துறையில் சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுடன் வெற்றிகரமாக பயணிக்கின்றது என்று சீனா ரயில்வே Rolling Stock Corporation. தெரிவித்துள்ளது.