சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலி.
ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதில் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென ஈராக் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.