அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட 14 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இரத்தினபுரி நகரில் இன்று அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும், அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரியும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு இரத்தினபுரி நகரில் ஊர்வலமாகச் சென்று இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி நகரில் இரு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.