7 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற இளைஞருக்கு தண்டனை

7 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்து, பலமுறை தரையில் தூக்கிப்போட்டு அடித்தே கொன்ற 25 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் பெயர் ஒமர் பின் ஹாசன் (25). ஹாசன் கடந்த செவ்வாய்க்கிழமை தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மே 8-ஆம் திகதி 2019-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த அன்று, ஹாசன் ஒரு 7 வயது சிறுவனை சாக்லேட் கொடுத்து கவர்ந்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுவன் கத்தி உதவிகேட்க முயன்றபோது, ஹாசன் அச்சிறுவனை பல முறை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டு சிறுவன் அங்கேயே உயிரிழந்தான்.
இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தக் குளத்தில் கிடந்த குழந்தையைப் பார்த்தனர். அவர்கள் ஹாசனை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், கடத்தல், இயற்கைக்கு மாறான பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹாசனை பொலிஸார் கைது செய்தனர். இந்நினையில், இந்த வழக்கில் ஹாசனை குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இறந்துபோன குழந்தையின் குடும்பத்திற்கு விரைவாக நீதியை உறுதி செய்த அதிகாரிகளை ராச்சகொண்டா பொலிஸ் கமிஷனர் மகேஷ் பகவத் பாராட்டினார்.