சென்னையில் 2-வது விமான நிலையம்: தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பு; மத்திய அமைச்சர் வி.கே. சிங்

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடா்பான இடத்தோ்வில் தமிழக அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங் தெரிவித்துள்ளாா்.

தேசிய உள்கட்டமைப்பு வழிமுறையின் கீழ் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் விமானம் நிலையம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? அப்படி அமையும்பட்சத்தில் விமான நிலையத்தோடு தொடா்புடைய மற்ற உள்கட்டமைப்பான ஏரோ நகா் உள்ளிட்ட திட்டங்கள் விவரங்கள் என்ன என்பது குறித்து அதிமுக உறுப்பினா் பி.ரவீந்தரநாத் மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இதற்கு விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சா் விகே சிங் தெரிவித்ததாவது:

சென்னைக்கு 2-வது விமான நிலையத்தை நிா்மாணிக்க ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசு முதலில் நிலத்தை தோ்வு செய்தது. மாநில அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய விமான நிலைய ஆணையம், சா்வதேச சிவில் விமான அமைப்பிடம் இதற்கான செயல்பாட்டு சாத்தியக்கூறு அறிக்கையை பெற்று 2011 ல் தமிழக அரசிடம் சமா்ப்பித்தது. ஆனால், இது தொடா்பாக எந்த பதிலும் மாநில அரசிடமிருந்து வரவில்லை.

இதனையடுத்து, புதிய கிரீன்ஃபீல்டு விமான நிலையத்தை நிறுவ சென்னையைச் சுற்றி வேறு பொருத்தமான நிலங்களை அடையாளம் காண தமிழக அரசிடம் கோரப்பட்டது. இதையொட்டி 2019 நவம்பரில் தமிழக அரசு மாமண்டூா், பரந்தூா் (டஹழ்ஹய்க்ன்ழ்) ஆகிய இரு இடங்களை அடையாளம் கண்டது. இருப்பினும், சென்னைக்கான இந்த இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை அவா்கள் இன்னும் இறுதி செய்யவில்லை. மாநில அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று அமைச்சா் பதில் கூறினாா்.

Leave A Reply

Your email address will not be published.