எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஜூலை 26 வரை ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் தொடர்ந்து நான்காவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களும் 5 அவசரச் சட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தின் முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று காலை முதலே மமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அடுத்தக் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.