யாழில் இரவோடு இரவாக கறுப்பு ஜூலை சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அரச படைகள்!
கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் இரவோடு இரவாகப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரால் முற்று முழுதாகக் கிழித்தெறியப்பட்டுள்ளன.
இந்தச் செயலைத் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை கண்டித்துள்ளது.
“ஜனநாயக நாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைவுகூருவதற்கு இலங்கை அரசு தடை போடுகின்றது என்றால் இங்கு ஜனநாயகம் எங்கு உள்ளது? இலங்கை அரசின் மிலேச்சத்தனமான இந்தச் செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.