ஹிஷாலினி சாவு தொடர்பான விசாரணைகளின் நிலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஹிஷாலினியை, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒதுக்கு புறமான அறையொன்றில் தனியாக தங்க வைத்திருந்ததாகவும், அதில் போதிய வசதிகளே இல்லை என ஆரம்பத்திலேயே செய்திகள் கசித்தாலும் , அது உண்மை என ஊர்சிதமாகியுள்ளது.

விசாரணைகளில் இது போன்ற பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவிக்கின்றார்.

18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரங்களில் தனியான அறையொன்றில் பாதுகாப்பற்ற முறையில் தங்க வைப்பது, தண்டனைக்குரிய குற்றம் என அவர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியை இவ்வாறு நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனையை வழங்க முடியும் என அவர் குறிப்பிடும் அவர் , சிறுவர்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றுக்கு உதவி புரிதல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு, இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம், குற்றவாளிகளுக்கு 360 C சரத்துக்கு அமைய 20 வருடங்கள் சிறைத் தண்டனையை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

காலம் தாழ்த்திய நிலையிலாவது, ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், ஶ்ரீலங்கா பொலிஸின் விசாரணைகள் தொடர்பில் தமக்கு திருப்தியடைய முடியாது என அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்ற விதத்தில் தாம் தண்டனையை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படுவதாக அதன் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

கைதானோரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த ஹிஷாலினி குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அத்தோடு ஹிஷாலினியின் ஊரான டயகமவில் மக்கள் ஹிஷாலினிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன.

வீடியோ

Leave A Reply

Your email address will not be published.