9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அவ்வணி சார்பில் பிரித்திவ் ஷா 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
சஞ்சு சம்சன் 46 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் 23 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்தனர்.
அதனடிப்படையில் பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் அவிஸ்க பெர்ணான்டோ 76 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதனடிப்படையல் 3 -1 என்ற ரீதியில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.