ரிஷாட் பதியூதீன் மனைவி உள்ளிட்ட நால்வர் குறித்து நீதிமன்றம் எடுத்த முடிவு
ரிஷாத் பதியுதீனின் மனைவி, தந்தை, மனைவியின் சகோதரர் மற்றும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.