23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே.
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மாதேவிர் 73 ரன்கள் எடுத்தார். ரியான் பர்ல் அதிரடியாக ஆடி 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால் ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜோங்வே, மசாகட்சா தலா 3 விக்கெட்டும், சதாரா, முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது வெஸ்லி மாதேவிருக்கு அளிக்கப்பட்டது.