சக்தி தொலைக் காட்சி – வானோலி நிர்வாகி மகாராஜா கொரோணா தாக்கத்தால் காலமானார்

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் காலமானார்.
கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிரச தொலைக்காட்சி, சிரச வானோலி மற்றும் சக்தி (தொலைக்காட்சி – வானோலி) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவராவார்.
கெவில்டன் மற்றும் இஸ்லோன் ஆகியோரும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது.
ராஜா மகேந்திரன் இலங்கையில் மின்னணு ஊடகத் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்த நபர்.
அவர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடும், கொரோனா வைரஸ் அவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக இறந்தவரின் இறுதி சடங்குகள் இன்று சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.