நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதால் பொலிசார் நடவடிக்கை

மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மாமல்லபுரம் அருகே காரில் வந்த போது கார் விபத்தில் சிக்கியது.
இதில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பவானியின் உடலைக் கைப்பற்றிய மாமல்லபுரம் பொலிசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் யாஷிகா மற்றும் அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பொலிசார் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிவேகமாக கார் ஓட்டியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.