11 வயது சிறுவனுக்கும் டெல்டா!

பேருவளை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 வயது சிறுவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபான டெல்டா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.ஜே.சிங்கபாஹூ தெரிவித்தார்.
பேருவளை ஹிரிக்கொடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுவன் காலி பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேலும் கூறினார்.