மாவட்ட சாஷனாரக்ஷக்க குழு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டது.

பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகளைக் கொண்ட மாவட்ட சாஷனாரக்ஷக்க குழு அமைக்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலாளருனம், அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்சன் ஜெயகொடி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த முறை தலைவராக இருந்த சங்கைக்குரிய டென்பிடியே ஹ{னாநந்த தேரர் இம்முறையும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக சங்கைக்குரிய கரதுடுகல இன்திரதன தேரரும், பிரதிதச் செயலாளராக சங்கைக்குரிய கொத்மலே தம்மசோஷ தேரரும், உதவிச் செயலாளர்களாக சங்கைக்குரிய ஹெடகிரகம தம்மஸ்ரீ தேரர் மற்றும் சங்கைக்குரிய பியங்கல பியசுமன தேரரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர். எம். சீ. ஜெய்னுலாப்தீன், பதவிநிலை உதவியாளர் கே.எம். றிழா, மாவட்ட தகவல் உத்தியோகத்தர் வீ. ஜீவானந்தன் ஆகியோரின் பிரசன்னமாயிருந்தனர்.