தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு!
சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல பாடசாலைகள் எமது சிபாரிசின் அடிப்படையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் கட்டங்கட்டமாக மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் மட்/ மகாஜனக்கல்லூரி, மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி,மட்/ இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கும் அதே போன்று இன்றைய தினம் மட்/ முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயம், மட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயம், மட்/ கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். இதன்போது அந்தந்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகம் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் இவ் உத்தியோகபூர்வ கடிதங்கள் மிக விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.