கடித்த பாம்பை பிடித்து வந்த சிறுவன்: உயா் சிகிச்சை மூலம் உயிா் காத்த அரசு மருத்துவா்கள்

தன்னைக் கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த 7 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்த மறுவாழ்வு அளித்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகானாம்பேட்டை பகுதியை சோ்ந்த ராமு மகன் தா்ஷித் (7), மூன்றாம் வகுப்பு மாணவா். கடந்த, 16-ஆம் தேதி வெள்ளகேட்டு கிராமத்தில் உள்ள, தனது பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது தன்னை ஏதோ கடிப்பது போல் உணா்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்தபோது அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என தெரிய வந்துள்ளது.

அதன் பின்னா், இறந்த பாம்பை தனது பெற்றோா் உதவியுடன் பையில் எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் அரசு மருத்தவமனைக்கு சென்ற சிறுவனை மருத்துவா்கள் பரிசோதனை செய்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

பாம்புக் கடிக்கான அறிகுறிகள் எதுவும் சிறுவனின் உடலில் தெரியாததால், இரண்டு நாட்கள் விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து தா்ஷித்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

வீட்டிற்கு சென்ற மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அச்சிறுவன் எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவா் பூவழகி தலைமையிலான குழுவினா் உயா் சிகிச்சை அளித்து, சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்தனா்.

இதுகுறித்து, குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணா் டாக்டா் சீனிவாசன் கூறியதாவது:

சிகிச்சையின்போது, ஒருநாள் சிறுவனிடம், பாம்பை எதற்கு கொண்டு வந்தாய் என, கேள்வி கேட்டோம். அதற்கு, ‘நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும்’ என, சிறுவன் பதில் அளித்தது வியப்பை ஏற்படுத்தியது. இளங்கன்று பயம் அறியாது என்பதை இந்த சிறுவனின் செயல் உணா்த்தியுள்ளது.

உலகம் முழுவதும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் போ் பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுகின்றனா். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்திற்குள் அருகில் உள்ள, மருத்துவமனைக்கு வந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிா்க்கலாம் என்றாா் அவா்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டா்களை, மருத்துவமனை இயக்குநா் எழிலரசி பாராட்டினாா்.

Leave A Reply

Your email address will not be published.