வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: கேரள முதல்வர் பினராயி எச்சரிக்கை

வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரதட்சணைக்கு எதிராக கேரளத்தில் அம்மாநில ஆளுநர் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இதுமாதிரியான சமூக அவலங்களுக்கு எதிராக தமிழ்நாட்டை போல் கேரளத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற சமூக அச்சுறுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொண்டால் இதை தடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கேரளத்தில் வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்துவருவதை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் பேசிய பினராயி, “காந்திய வழியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்
2011 முதல் 2016 வரையிலான காலத்தில், வரதட்சணை தொடர்பான வழக்குகளில் தற்கொலை உள்பட 100 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016 முதல் 2021 வரை காலத்தில், இந்த எண்ணிக்கை 54ஆக குறைந்தது” என்றார். 2020-2021 காலக்கட்டத்தில் வரதட்சணை தொடர்பாக ஆறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.