அரசுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்ப்பாணத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் சேவைச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர், மாணவர், பெற்றோர்களைத் துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்சு வழங்கு, 24 வருட ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாத் தீர்வு வழங்கு, இலவசக் கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்துச் செய் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும், நாடு பூராகவும் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.