பதியுதீனின் மனைவி வெளிநாடுகளுக்கு ஆள் கடத்துவதில் ஈடுபட்டுள்ளார் : பிரதீப் சஞ்சீவ

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதீயுதீனின் மனைவி படகு மூலம் ஆள் கடத்தல் செய்தமைக்காக நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வந்ததாக சிங்களே அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நடந்து வந்ததாகவும் , அந்த நீதிமன்றத்துக்கு அவர்களது ஆதரவாளர்கள் கல்லேறிந்ததாகவும் , பின்னர் அந்த வழக்கு அரசியல் பலத்தால் அமுங்கி போனதாகவும் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் அவர் மனித கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததாகவும் அந்த அமைப்பின் அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.