மதத்தலைவர்களுக்கான அனர்த்த அபாய தடுப்பு கருத்தரங்கு!
முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் சர்வோதய அரசசார்பற்ற நிறுவனமும் இணைந்து மாவட்ட மாதத்தலைவர்களுக்கான அனர்த்த அபாய தடுப்பு கருத்தரங்கு மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கின் அறிமுக நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, நிர்வாக உத்தியோகத்தர் சு.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
மக்கள் வழிபாட்டிடங்களில் அதிகமாக கூடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமிருப்பதனால் மதத்தலைவர்களுக்கான அனர்த்த அபாய தடுப்பு சார் விழிப்புணர்வினை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குறித்த கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டின் ஆசாதாரண சூழ்நிலையான கொரோனா தொற்று காரணமாக பிரதான மதகுருக்களுடன் 30 பிரதிநிதிகளுடன் மட்டுப்படுத்தியதாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கின் வளவாளராக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் லிங்கேஸ்வரகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.