அடுத்த ஆண்டு இறுதியில் சந்திரயான்-3 ஏவப்படும்

அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில், “சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்குவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்புமுறைகளின் நடைமுறையாக்கம், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்துக்கான பணிகள் கரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்தது. எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொதுமுடக்கத்தின்போதும் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கிநடைபெற்று வருகின்றன’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.