ஆகஸ்ட் மாதத்திலேனும் நாட்டை முழுமையாக திறக்க முடியுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்கள் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இருப்பினும் ,சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னரைப் போன்று கடுமையாக்க வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், கடந்த சில வாரங்களைவிட தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெரும் எண்ணிக்கையோனோருக்கு அறிகுறிகள் தென்படுவதோடு, அவர்கள் சிக்கல் நிலைமை அதிகமுடையவர்களாகவும் உள்ளனர்.
குறிப்பாக பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோகவுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்திலேனும் நாட்டை முழுமையாக திறக்க முடியுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுகிறனர் என்று நாம் அவதானித்தால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும்.
மேலும் ,மாறாக அவ்வாறில்லை என்றால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தாமதம் ஏற்படும் அல்லது கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டியேற்படும் என்றார்.