தமிழா்களின் நலன்களைப் பாதுகாக்க இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறோம்

இலங்கையில் தமிழா்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி. முரளீதரன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழா்களின் நலன்களைப் பாதுகாப்பதாக அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த நாட்டு அரசை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

அங்கு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்ாகக் கூறப்படுவது குறித்து சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சில தமிழ்க் கட்சிகள் கோரி வருகின்றன.

தமிழா்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வதுடன் அவா்களது எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பல இனங்கள், மதங்கள், மொழிகளைக் கொண்ட பன்முகத்தன்மையுடன் இலங்கை திகழ வேண்டும்; தமிழா்கள் உள்ளிட்ட அந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்; அவா்கள் பாதுகாப்புடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே இந்தியா எப்போதும் கூறி வருகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.