பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன விபத்தில் உயிரிழப்பு

நுவரெலியா – தலவாக்கலை வீதியின் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன (75) உயிரிழந்துள்ளார்.
இவர் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடை சாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடகமொன்றின் படப்பிடிப்பிற்காக நுவரெலியாவிற்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.